எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 25 தமிழர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதன் காரணமாக கடந்த 30-ந்தேதி முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 94 நிவாரண முகாம்களில் உள்ளனர். 600-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் தெரிய வந்தது. அவர்களை மீட்பதற்கான பணிகள் நேற்று (சனிக்கிழமை) 5-வது நாளாக நடந்தது. இதுவரை 361 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 295 பேர் இதுவரை காணவில்லை. அவர்களில் 250 பேர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மொத்தம் 640 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளன. நவீன எந்திரங்கள், மேம்படுத்தப்பட்ட சென்சார் கருவிகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சேறு மற்றும் இடிபாடுகள் குவிந்து கிடக்கும் பகுதிகளில் தேடுதல் தொடர்கிறது. நேற்றைய தேடுதலில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த மேலும் சிலரது உடல்களும் மீட்கப்பட்டன. இதனால் நேற்று பலி எண்ணிக்கை 361 ஆக உயர்ந்தது.
நிலச்சரிவில் உயிர்தப்பியவர்கள் மற்றும் அரசு பராமரித்து வரும் ஆவணங்களின் அடிப்படையில் மாயமானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 250 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. எது எப்படியென்றாலும் கடைசி நபர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.
இதற்கிடையே வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பலர் வயநாட்டில் நிரந்தரமாக தங்கி வேலை செய்து வருகிறார்கள். பலர் வேலை நிமித்தமாக சென்று தற்காலிகமாக குடியேறியுள்ளனர். இவர்களில் நிரந்தரமாக அங்கு குடியேறிய தமிழர்கள் 21 பேரும், வேலைக்கு சென்று தங்கிய காளிதாஸ், கல்யாண், சிராபுதீன் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த 24 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீரன் தலைமையிலான மீட்பு குழுவினர் வயநாடு சென்று அங்கு பாதிப்புக்குள்ளான தமிழர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இதில்தான் 24 தமிழர்கள் உயிரிழந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. இவர்களை தவிர தமிழகத்தை சேர்ந்த 25 பேர் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் நிரந்தரமாக வயநாட்டில் தங்கியவர்கள் 22 பேர் ஆவர். வேலைக்காக சென்ற 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் முகாம்களில் 130 தமிழர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குமா..? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
15 Feb 2026முனிச், அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா அல்லது தொடந்து வாங்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள
-
வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா
15 Feb 2026மதுரை, வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை சசிகலா தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா: ராஜ்நாத்சிங் பங்கேற்பு
15 Feb 2026கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
-
இந்தியாவில் அமையும் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை - ரயில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
15 Feb 2026புதுடெல்லி, இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
விஜய்-திரிஷா குறித்த அவதூறு பேச்சு: நயினாருக்கு ராமதாஸ் கண்டனம்
15 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2026தஞ்சை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
-
40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
15 Feb 2026சென்னை, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார
-
மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்
15 Feb 2026புதுடெல்லி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகின்றனர்.
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Feb 2026ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க.
-
மாசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
15 Feb 2026சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காண
-
தமிழ்நாட்டில் பிப். 23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
15 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம்
15 Feb 2026தூத்துக்குடி, விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
-
அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Feb 2026சென்னை, அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க.
-
ஜெர்மனி, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜெலன்ஸ்கி - ரூபியோ முக்கிய பேச்சுவார்த்தை
15 Feb 2026முனிச், ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து முக்கிய பேச
-
வங்கதேசத்தில் புதிய அரசு நாளை பதவியேற்கிறது: இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் பங்கேற்பு
15 Feb 2026டாக்கா, வங்கதேச புதிய பிரதமராக பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்கும் விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்க உள்ளதா


