முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் : மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      உலகம்
Iran 2024 08 04

Source: provided

ஜெருசலேம் : இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் சென்றார். கடந்த  31-ல் தலைநகர் டெக்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த போது அவர் படுகொலை செய்யப்பட்டார். 

அவரது படுக்கை அறையில் ஏற்கெனவே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக முன்பு தகவல் வெளியானது.  ஆனால் இதனை மறுத்த ஈரான், ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறியது. இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாத், தனது ஈரான் உளவாளிகள் மூலம் இந்த தாக்குதலை நடத்தி யிருக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே, இஸ்மாயில் ஹனியா கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த போர் பதற்றம் காரணமாக, லெபனானில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள், உடனடியாக வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேலின் பெய்ட் ஹிலால் நகரத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், மத்தியக் கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து