முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் தோல்வியடைந்தால் அதிகார மாற்றம் அமைதியாக நடைபெறாது : அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      உலகம்
Joe-Biden 2023-08-26

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை டிரம்ப் தோல்வியடைந்தால் கமலா ஹாரிஸூக்கு அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ம் தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டுடிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. 

அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். வேட்பாளரை மாற்ற கட்சியில் பல தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர். 

இதையடுத்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார். இதனையடுத்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ்  ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை டிரம்ப் தோல்வியடைந்தால் கமலா ஹாரிஸூக்கு அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். 

 முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் அதிபர்   டிரம்ப் தன்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் அமெரிக்காவில் ரத்தக் களறி ஏற்படும் என்று கடந்த மார்ச் மாதம் பேசியிருந்தது  குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து