எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை மாநில அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவர்களின் போராட்டம் அங்கு தொடர்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (செப். 11) மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு மாநில அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் மருத்துவர்கள், 'முதல்வர் மமதா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும், பேச்சுவார்த்தையில் 30 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவுக்கு அனுமதி வேண்டும், பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனால் அன்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இதையடுத்து, கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது மாநில அரசு. இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நபன்னாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் முதல்வர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தையை நேரடி ஒலிபரப்பு செய்ய முடியாது, ஆனால் பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது.
15 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு மட்டும் கலந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மாநில அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மாநில அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டும் நிலையில் மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வரும். பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |