முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் பயணம்: அமீரகத்தை சேர்ந்தவர்கள் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: இஸ்லாமிய விவகாரத்துறை அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      ஆன்மிகம்      உலகம்
Hajj-2024-09-19

அபுதாபி, அமீரகத்தை சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு (2025) புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள நேற்று முதல் வருகிற 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இஸ்லாமிய விவகாரத்துறை பொது ஆணையம் அறிவித்துள்ளது. 

இது குறித்து அமீரக இஸ்லாமிய விவகாரத்துறை பொது ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல விரும்புவார்கள். அமீரகத்தை சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு (2025) புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள நேற்று முதல் வருகிற 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் நபர்கள் 12 வயதை அடைந்தவராகவும், கடந்த 5 ஆண்டுகளில் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும். முதல் முறையாக ஹஜ் பயணம் செய்ய இருப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 

இதற்காக ஆணையத்தின் செயலி மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள அடுத்த ஆண்டு அமீரகத்தை சேர்ந்த 6 ஆயிரத்து 228 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நடப்பு ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் இருந்து சுமார் 18 லட்சம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து