எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி, ஆக.11 - மாண்புமிகு நிதி அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சுருளி அருவி சாரல் திருவிழாவை துவக்கிவைத்து பேசுகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் தலைமையிலான தமிழக அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த நிதியாண்டில் சுமார் ரூபாய் 154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவி தமிழகத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் பிரசித்துப்பெற்ற ஸ்தலமாகும் இவ்வருவிக்கு மிக பழமையான வரலாற்றுச் சிறப்பு உண்டு. இங்கு சித்தர்களும் யோகிகளும் வந்துசென்ற சிறப்பு வாய்ந்த இடமாகும். தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களான கும்பக்கரை அருவி, வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளை கவருகின்ற வகையில் புங்ைகாக்களை அமைப்பதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
மேலும் மேகமலைக்குச் செல்லுகின்ற தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்துவதற்காக ரூபாய் 90 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் தமிழக முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 36 அரசு கலைக்கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரிகளையும் 11 தொழில்நுட்ப கல்லூரிகளையும் அமைக்க ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் கடந்த வாரம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தேக்கம்பட்டியில் புதிதாக தொழில்நுட்ப கல்லுரியில் வகுப்புகள் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஐந்து அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தினை அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள் அவற்றில் போடிநாயக்கனுனூர் ஒன்றாகும். தேனி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காக 1500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழிற்பேட்டையினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் தமிழக அரசு மேற்கொள்கின்ற அணைத்து வளர்ச்சிப்பணிகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
சுருளி அருவி சாரல் திருவிழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மற்றும் பிற துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் திறந்துவைத்து பேசியபோது தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்துத்துறை வளர்ச்சிகளிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்கள் மக்களை கவருகின்ற வகையில் ம்ேபடுத்துவதற்காக போதிய நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற சுற்றுலா விழாக்களை அந்த மாவட்டத்திற்கு தகுந்தாற்போல் நடத்திட ஆணை பிறப்பித்துள்ளார்கள். அந்;த அடிப்படையில் இன்றைய தினம் தேனி மாவட்டம் சுருளி சாரல் திருவிழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா விழாக்களை நடத்துவதற்கு காரணம் கண்ணிற்கு குளுமையினையும், இதயத்திற்கு இனிமையினையும் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலா விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாண்டில் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. அதேபோன்று குற்றாலம், ஓகேனிக்கல் மற்றும் சுருளி அருவியில் அதிகமான நீர் கொட்டுவதால் அவற்றில் நீராடுவதற்காக ஆயிரக்கனக்கான மக்கள் வந்துசெல்கின்றனர்.
தேனி மாவட்டம் அதிகப்படியான சுற்றலா பயனிகளை கவருகின்ற வகையில், கும்பக்கரை அருவி, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மேகமலை ஆகிய ஸதலங்கள் அமைந்துள்ளது. இங்கு அதிகப்படியான சுற்றுலா பயனிகள் வருகை தருவதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்று மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களது கோர்யீக்கையினை அறிக்கையாக பெற்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கருத்துரு தயாரித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டுசென்று சுற்றுலா ஸ்தலங்களில் அடிப்படை தேவைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்றைய விழாவில் அனைத்துத்துறைகளின் சார்பில் தமிழக அரசின் சாதனைகளை தெரிவிக்கின்ற வகையில் பல்வேறு கண்கவர் காட்சிகளை அமைத்துள்ளார்கள். குறிப்பாக தோட்டாக்கலைத்துறையின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் திறந்துவைக்கப்பட்ட கர்னல் பென்னிகுவிக் மணிமண்டபத்தின் மாதிரியை காய்கறிகளைக் கொண்டு நேர்த்தியாக அலங்கரித்துள்ளார்கள.; அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவீண்குமார் அபினபு, இ.கா.ப. அவர்கள், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.லாசர் அவர்கள், கம்பம் ஒன்றியக்குழுத்தலைவர் திரு.தங்க முருகன் அவர்கள், சுருளிபட்டி ஊராட்சிமன்றத்தலைவர் திரு.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.முருகேசன் அவர்கள், கம்பம் நகர்மன்றத்தலைவர் திரு. சிவக்குமார் அவர்கள்,; மேகமலை வன உயிரின காப்பாளர் திரு.வெங்கிடசாமி அவர்கள், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சிவ.ஜானகி அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மகாலிங்கம் அவர்கள், துணைத்தலைவர் திரு.ஆண்டி அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எம்.ஆர்.்ஸ்வரன் அவர்கள், கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமதி.்ஸ்வரி பாலன் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.என்.ரமேஷ், வட்டாட்சியர் திரு.தனலிங்கம் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜீவரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஜெ.விஜயாராணி அவர்கள வரவேற்புரையாற்றினார், சுற்றுலா அலுவலர் திரு.குணசேகரன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.