முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : பிரதமர் மோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      சினிமா
Mithun-Chakravarthy 2024-03

Source: provided

புதுடெல்லி : பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 8-ம் தேதி நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் மிதுன் சக்கரவர்த்திக்கு இந்த விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மிதுன் சக்கரவர்த்திக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

1976-ம் ஆண்டு மிரிகயா என்ற இந்திப் படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் மிதுன் சக்கரவர்த்தி. வங்காளம், பஞ்சாபி, ஒடியா, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான யாகாவாராயினும் நாகாக்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.  1990-ல் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான அக்னிபாத் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பாராட்டப்பட்டது. 

கடந்த 2014-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மிதுன் சக்கரவர்த்தி, பின்னர் 2021-ல்  பா.ஜ.க.வில் இணைந்தார். பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் 2009 முதல் 2018 வரை நடுவராக இருந்தார். முன்னதாக அவருக்கு மத்திய அரசின் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரின் திரைத்துறை பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

மிதுன் சக்கரவர்த்தியின் திரையுலக பயணம் அடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகமாக அமையும். இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமையடைகிறேன். வரும் 8-ம் தேதி நடைபெறும் 70-வது தேசிய விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மிதுன் சக்கரவர்த்திக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மிதுன் சக்கரவர்த்தி இந்திய சினிமாவுக்கு ஆற்றிய ஈடு இணையில்லாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது நடிப்புக்காக தலைமுறை தாண்டியும் போற்றப்படுவார். அவருக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து