முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாலிவுட் நடிகர் கோவிந்தா காயம்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      சினிமா
Govinda 2024-03-24

Source: provided

மும்பை : நடிகரும், சிவ சேனா கட்சி (ஷிண்டே அணி) பிரமுகருமான கோவிந்தாவின் உரிமம் பெற்ற கைத் துப்பாக்கி (ரிவாவல்வர்) தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது காலில் இருந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டு விட்டது, அவர் தற்போது நலமாக உள்ளார் என்று அவரது மேலாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 

நேற்று அதிகாலை 4.45 மணிக்கு வெளியே செல்வதற்கு கோவிந்தா கிளம்பிக்கொண்டிருந்த போது தனது உரிமம் பெற்றத் துப்பாக்கியை சுத்தம் செய்த போது இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

துப்பாக்கி வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் மும்பையின் கிரிட்டிகேர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா மும்பையில் இல்லை. 

இருப்பினும், தற்போது கோவிந்தா நலமாக உள்ளதாகவும், அபாய கட்டத்தை கடந்து விட்டதாகவும் அஹுஜா தெரிவித்துள்ளார். தற்போது கோவிந்தாவுடன் மருத்துவமனையில் அவரது மகள் உள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து கோவிந்தாவின் மேலாளர் ஷசி சின்ஹா கூறுகையில், 

நடிகர் கோவிந்தா கொல்கத்தா செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கைத்துப்பாக்கியை அலமாரியில் வைக்கும் போது அது அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்து வெடித்து அதன் தோட்டா அவரது காலில் பாய்ந்தது என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து