முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியூயார்க்கில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      உலகம்
New-York-School 2024-10-30

Source: provided

நியூயார்க் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது

நியூயார்க் நகர வரலாற்றில் முதன்முறையாக தீபாவளி தினத்தில் பள்ளிகள் மூடப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.  ஒளிகளின் திருவிழா என அழைக்கப்படும் தீபாவளியை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினர் கொண்டாடுகின்றனர்.  

அமெரிக்காவில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.  இதுபற்றி சர்வதேச விவகாரங்களுக்கான மேயர் அலுவலக துணை ஆணையாளர் திலீப் சவுகான் கூறும் போது, 

இந்த வருட தீபாவளி சிறப்பானது. நியூயார்க் நகர வரலாற்றில் முதன்முறையாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரவிருக்கின்ற வெள்ளி கிழமையன்று பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும்.  

நியூயார்க் நகரில் 11 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.  அதனால், தீபாவளியன்று நகரில் பொது விடுமுறையை அறிவிப்பது என்பது எளிதல்ல. பல ஆண்டுகளாக சமூக தலைவர்கள் பலர், இதற்கான இயக்கம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர்.  இறுதியில், மேயர் எரிக் ஆடம்ஸ் நிர்வாகத்தின் கீழ், பள்ளி விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என்றார்.  

இதற்காக மேயர் ஆடம்சுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருக்கிறோம்.  அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படும்.  தீபாவளி தினத்தில் அவர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.  அதனால் மாணவர்களுக்கு, அன்றைய தினம் கோவிலுக்கு செல்வதா? அல்லது பள்ளிக்கு செல்வதா? என்ற நெருக்கடி இந்த ஆண்டில் இருக்காது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து