முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்திய நான்கரை லட்சம் வங்கி கணக்குகள் முடக்கம் : மத்திய அரசு நடவடிக்கை

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      இந்தியா
CYBER-CRIME 2024-10-28

Source: provided

புதுடெல்லி : ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் நான்கரை லட்சம் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.

நவீன உலகில் தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் செல்கிறது. அடுத்தடுத்து வெளி வரும் புதிய கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கி வரமாக மாறினாலும், மறுபுறம் பல்வேறு தீமைகளை விளைவித்து சாபமாகவும் அமைந்து விடுகிறது.

உலகம் முழுவதும் நாள்தோறும் பதிவாகும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி. எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இணையம் மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் மர்ம நபர்கள் பெரும் குற்ற செயலில் ஈடுபட்டு சேதங்களை விளைவிக்கின்றனர்.

மோசடி, தரவு திருட்டு, கணினி முடக்கம், ஆபாச அத்துமீறல் என இந்த குற்றங்களின் பட்டியல் நீளுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் சுமார் ஒரு லட்சம் சைபர் குற்றங்கள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதில் பெரும்பாலும் அடுத்தவரின் பணப்பையை குறி வைத்து நடக்கும் நிதி மோசடிகளே பரவலாக நடந்து வருகின்றன. அந்த வகையில் இந்த குற்றங்கள் மூலம் ஒரே ஆண்டில் சுமார் ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு உள்ளது.

விசாரணை அமைப்புகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்த சைபர் கிரைம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். 

குறிப்பாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மையம் (14சி) அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி, ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்படும் பணத்தை கையாளுவதற்கு என பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் லட்சக்கணக்கான கணக்குகளை இந்த மோசடிதாரர்கள் வைத்து இருப்பது தெரியவந்தது.

இந்த வங்கிக் கணக்குகள் பெரும்பாலும் மற்றொருவரின் ஆவணங்கள் மூலம் தொடங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த கணக்குகளில் இருந்து காசோலை, ஏ.டி.எம். மற்றும் டிஜிட்டல் முறையில் பணத்தை மோசடிதாரர்கள் வெளியே எடுத்து வந்ததும் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து மேற்படி வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள் அறிக்கையாக வழங்கினர். அத்துடன் பிரதமர் அலுவலகத்துக்கும் சமீபத்தில் வழங்கினர்.

அப்போது சுமார் 3 மணி நேரம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இத்தகைய வங்கிக் கணக்குகளை கையாளுவதில் வங்கித்துறையின் குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்த கணக்குகளை தொடங்கியதில் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க அறிவுறுத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்தை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்த வங்கிக் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச போலீசாருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் நான்கரை லட்சம் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.

இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10 ஆயிரம் கணக்குகள், கனரா வங்கியில் 7 ஆயிரம், கோடக் மகேந்திரா வங்கியில் 6 ஆயிரம், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியில் 5 ஆயிரம் கணக்குகளும் அடங்கும். 

இவ்வாறு ஆன்லைன் மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது இந்திய வங்கித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து