முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் சிலையுடன் தவெக தலைவர் விஜய் செல்பி

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      தமிழகம்
Vijay 2024-12-06

Source: provided

சென்னை : தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்றார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு பிறகு தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சி இதுவாகும்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதியரசர் சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், புத்தக வெளியீட்டு விழா நடைபெறும் பகுதிக்கு வந்த தவெக தலைவர் விஜய் அங்கு அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைபடம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து