முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் ரீதியான தொடுதல் வன்புணர்வு இல்லை: போக்ஸோ வழக்கில் இளைஞரை விடுவித்த டெல்லி உயர்நீதிமன்றம்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      இந்தியா
court 2024-12-30

Source: provided

டெல்லி: உடல் ரீதியான தொடுதலால் மட்டுமே அதை பாலியல் உறவு என்று எடுத்துக்கொள்ள முடியாது என போஸ்கொ வழக்கிலிருந்து உயர்நீதிமன்றம் ஒருவரை விடுவித்துள்ளது.

போக்ஸோ வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டநபர் ஒருவர் அதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2017 ஆம் ஆண்டு மார்ச்சில், 14 வயது பெண்ணின் தாயார், தனது மகளை நபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாகக் குற்றம் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவருடன் ஃபரிதாபாத்தில் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.

சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அனால் சிறுமி போலீசிடமும், நீதிமன்றத்திலும் அளித்த வாக்குமூலத்தில், தானாக முன்வந்து குற்றம் சாட்டப்பட்டவருடன் சென்றதாகவும், அவரை தனது காதலன் என்றும் காவல்துறையிடம் தெரிவித்தார். மேலும் அவர்கள் ஒரு வாடகை அறையில் ஒன்றாக தங்கியதாகவும் கூறினார்

மேலும் குற்றம் சாட்டப்பட்டவருடன் நான் தங்கியிருந்த போது, அவர் என் மீது எந்தவிதமான உடல் ரீதியான தாக்குதலையும் செய்யவில்லை, என்னுடன் தவறான செயல்களில் ஈடுபடவில்லை என்றும் உடல் ரீதியான தொடுதல் இருந்தது என்று மட்டுமே தெரிவித்தார். ஆனாலும் விசாரணை நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. உடல் ரீதியாக தொகுதல் மற்றும் பாலியல் செயல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகிய மூன்றுக்கும் சாட்சிகள் மூலம் வித்தியாசம் அறிந்து அதன் பின்தான் முடிவுக்கு வர வேண்டும் என்றும், சிறுமியுடன் உடல் ரீதியான தொடுதலே பாலியல் உறவு என விசாரணை நீதிமன்றம் எவ்வாறு ஒரு முடிவுக்கு வந்ததது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதலேயே அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வன்புணர்வு போக்ஸோ வழக்கில் சேரும். ஆனால் உடல் ரீதியான தொடுதலை மட்டுமே பாலியல் வன்புணர்வுக்கான போக்ஸோ வழக்காக கருத முடியாது. முந்தைய விசாரணையில் சிறுமி, உடல் - ரீதியான தொடுதல் என்று குறிப்பிட்டுருந்தாலும், வன்புணர்வு என்ற அர்த்தத்தில் தான் அவர் குறிப்பிட்டாரா என்று தெளிவுபடுத்தப்படவில்லை எனவே சந்தேகத்தை மனுதாரருக்கு சாதகமாக்கி மனுதாரரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து