முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதற்கட்டமாக சிறை பிடிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் 90 பேரை விடுதலை செய்த இஸ்ரேல்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      உலகம்
Benjamin 2023-10-31

Source: provided

காசா முனை : போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. அதன் அடிப்படையில், காசா முனையில் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதேபோல், காசாவில் தாக்குதலை நிறுத்தவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

போர் நிறுத்தம் மொத்தம் 3 கட்டங்களை கொண்டது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் 33 பணய கைதி களை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. இந்த போர் நிறுத்தம் நேற்றுமுன்தினம் மதியம் அமலுக்கு வரவிருந்தது.

போர் நிறுத்தத்தின் முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 90 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும். அதன்படி, இஸ்ரேல் விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை வெளியிட்டது. 

இதனிடையே கடும் இழுபறிக்கு பிறகு, 3 பெண் பணயக்கைதிகளின் பெயர் விவரங்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் அமைப்பு வழங்கியது. இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தின் படி முதற்கட்டமாக இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து