முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து மம்தா குல்கர்னி நீக்கம்

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2025      சினிமா
Mamtha 2025-01-31

Source: provided

பிரயாக்ராஜ் : துறவறம் பூண்ட பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்குவதாக, கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் அறிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, இந்திய மொழி படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், நாயகியாகவும் நடித்தவர். தமிழில், ஷோபா சந்திரசேகரன் இயக்கிய நண்பர்கள் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில், போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். போலீஸ் விசாரணைக்கு வராமல், வெளிநாடுகளில் தலைமறைவாகவும் இருந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் நாடு திரும்பிய அவர், தற்போது நடந்து வரும் கும்பமேளாவுக்கு சென்றார். அங்கு துறவறம் பூண்டதாகவும், தன் பெயரை மாய் நந்த் கிரி என்று பெயர் மாற்றிக்கொண்டதாகவும் அறிவிப்பு வெளியானது. அவரை, கின்னர் அகாரா என்ற அமைப்பின் மகா மண்டலேஸ்வர் ஆக நியமித்துள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியானது.

இது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும், அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கூட, தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். 'உலக இன்பத்தை எல்லாம் அனுபவித்தவர்கள், ஒரே நாளில் துறவி ஆகி விடுகின்றனர்' என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: எனக்குத் தெரியாமல், மகா மண்டலேஸ்வர் லஷ்மி நாராயண் திரிபாதி, இந்த வேலையை செய்து விட்டார். அவரை அகாராவில் இருந்து நீக்குகிறேன். மம்தா குல்கர்னியையும் மகா மண்டலேஸ்வர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து