முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒருநாள் போட்டியில் கோலி விளையாடுவாரா..? - துணை கேப்டன் சுப்மன் கில் பதில்

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

நாக்பூர் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி களமிறங்கவில்லை. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியில்  அவர் விளையாடுவாரா..? என்ற கேள்விக்கு துணை கேப்டன்  சுப்மன்  கில் பதிலளித்துள்ளார்  

விராட் கோலி இல்லை...

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-4 (5 போட்டிகள்) என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று  முன்தினம் நடைபெற்றது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு, முந்தைய நாள் பயிற்சியின்போது வலதுகால் முட்டியில் காயம் ஏற்பட்டதால் அவரால் இந்த ஆட்டத்தில் ஆட முடியவில்லை.

இந்தியா வெற்றி...

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 9-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.

கோலி விளையாடுவாரா?

இந்த 2-வது போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து இந்திய துணை கேப்டன் சுப்மன் கில்லிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கில், "விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை. எனவே நிச்சயமாக அவர் 2-வது போட்டியில் விளையாடுவார் என்று நினைக்கிறேன்" என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து