Idhayam Matrimony

தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டனர்: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      விளையாட்டு
Hardick-pandya

Source: provided

துபாய்: தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் அதிருப்தி...

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து மீண்டும் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா இணைந்தார். மீண்டும் மும்பை அணியில் இணைந்த அவர் அந்த அணியை கேப்டனாக வழிநடத்தினார். மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மும்பை அணியின் போட்டிகளின்போது, ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் கிண்டல், கேலிகளுக்கு ஆளானார்.

மீண்டும் கிடைத்துவிட்டதாக... 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக பேசிய ஹர்திக் பாண்டியா, தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: எனது வாழ்க்கை முழுமையாக மாறியுள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். பழைய நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை எனவும் கூறுகிறார்கள். எனது ரசிகர்கள் எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன். புது ஆண்டு, புதிய தொடர், புதிய சவால்கள் எங்களுக்காக காத்திருக்கின்றன. மீண்டும் ஐ.சி.சி. சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்றார்.

சிறப்பான பங்களிப்பு...

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தன் மீதான ரசிகர்களின் எதிர்மறை எண்ணங்களை புறந்தள்ளி, மீண்டும் ரசிகர்களின் அன்புக்குரியவரானார் ஹர்திக் பாண்டியா. அவர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 144 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து