எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அமெரிக்க : டெஸ்லா காரை அமெரிக்க அதிபர் டிரம்ப் வாங்கியுள்ளார். அந்த காருடன் எலான் மஸ்க்- டிரம்ப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் டெஸ்லா கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகை முன் அவருடன் எலான் மஸ்க் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் கடந்த திங்கள்கிழமை இரவு தனது நெருங்கிய நண்பரும், அரசு செயல் திறன் தலைவரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க்கிடம் டெஸ்லா நிறுவனத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் தான் புதிய கார் ஒன்றை வாங்குவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி, வெள்ளை மாளிகையில் சௌத் லார்ன் பகுதியில் விதவிதமான 5 கார்கள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டன. அதனை டிரம்ப் பார்வையிட்டார். அதில், சிவப்பு நிற டெஸ்லா எஸ் செடான் மாடல் காரை டிரம்ப் தேர்வு செய்தார்.
இந்தக் காருக்கான விலையான 80,000 டாலருக்கான(சுமார் ரூ.69 லட்சம்) காசோலையையும் வழங்கினார் டிரம்ப். இந்த டெஸ்லா காரை வாங்கியதன் மூலம் எலான் மஸ்க்கின் பங்குகள் ஒரே நாளில் 4 சதவிகிதம் வரை உயர்ந்திருக்கின்றன. ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ஆதரவளிப்பது அரசின் நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். இருப்பினும் இது தொடர்பாக வெள்ளை மாளிகையிலிருந்து அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


