முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பன்னீர்செல்வம் கேள்வியால் குலுங்கி சிரித்த எடப்பாடி பழனிசாமி

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      தமிழகம்
EPS 2024-04-10

Source: provided

சென்னை : மாந்திரீக பூஜை குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியபோது எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, திருவாலங்காடு கோவிலில் மாந்திரீக பூஜைக்கு போதிய வசதியில்லை என திருவள்ளூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் பேசினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு மாந்திரீக பூஜை குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார். பின்னர் பரிகார பூஜையைத்தான் தவறுதலாக மாந்திரீக பூஜை என சொன்னேன் என்று எம்.எல்.ஏ. ராஜேந்திரன் விளக்கமளித்தார். இதையடுத்து, மாந்திரீகம் பற்றி ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியாதது ஒன்றுமில்லை என அமைச்சர் சேகர்பாபு நகைச்சுவையாக பதிலளித்தார். ஆன்மிகவாதியான ஓ.பன்னீர்செல்வம், பல கோவில்களுக்கு சென்று எண்ணங்கள் நிறைவேற வழிபடுபவர் என சேகர்பாபு கூறினார். இந்த விவாதத்தின்போது அவையில் சிரிப்பலை எழுந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து