எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னைக்கு விமானத்தில் வந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு விமானம் மூலம் தப்பிச் செல்லவிருந்த வடமாநிலக் கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்துள்ளார்.
குற்றச்செயலில் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அடையாளம் காட்டுவதற்காக, நேற்று அதிகாலை தரமணி ரயில்நிலையம் பகுதிக்கு கொள்ளையர்களைக் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது, ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த வடமாநில கொள்ளையன் ஜாஃபர் இரானி (32) என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இருவரும், ஈரானியக் கொள்ளைக் கும்பலைச் சோ்ந்த கொள்ளையா்கள் என்பதும், மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே உள்ள அம்பிவேலிப் பகுதியைச் சோ்ந்த அம்ஜத் இரானி (20), ஜாபா் இரானி (32) என்பதும், அவா்கள்தான் 6 இடங்களிலும் தங்கச் சங்கிலி பறித்தவா்கள். இவர்களில் ஜாபர் இராணி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை கைது செய்தோம். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸாா் கைது செய்தனா்.
அவர்கள் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அடையாளம் காட்ட தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றோம். அப்போது அங்கே அவர்கள் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது சுட்டனர். ஆனால் நல்வாய்ப்பாக காவல்துறையினருக்கு காயம் ஏற்படவில்லை. காவல் வாகனம் மீது குண்டுகள் பாய்ந்தன. தற்காப்புக்காக, காவல்துறையினர் சுட்டதில் ஜாபர் பலியானார் என்று தெரிவித்தார்.
மேலும் காவல்துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த காவல் ஆணையர் அருண், பறிக்கப்பட்ட செயின்களை பதுக்கி வைத்திருக்கும் இடத்தையும் இருசக்கர வாகனத்தையும் காட்டுவதற்காக ஜாபரை அழைத்துச் சென்றபோது இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டது.
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். குற்றத்துக்குப் பயன்படுத்தியிருப்பது கர்நாடக பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் நேற்று குற்றவாளிகளால் பறிக்கப்பட்ட செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்துக்கு உள்ளிருந்துதான் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டார். இவர்கள் மிகப்பெரிய கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள். மோட்டார் பைக்கை பறிமுதல் செய்ய கைதானவர்களை அழைத்துச் சென்றபோதுதான் என்கவுன்டர் சம்பவம் நடந்தது.
கைதான இருவரும் தனித்தனியே விமானத்தில் சென்னை வந்து ஒன்றாக கொள்ளையடித்துவிட்டு மீண்டும் தனித்தனியாக விமானத்தில் தப்புவது வழக்கம். இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 26 சவரன் மதிப்புள்ள ஆறு செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த செயின் பறிப்பில் ஒரு பெண்மணி கீழே விழுந்ததில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
ஈரானிய கொள்ளையர்கள் என்பது மும்பை சுற்றுவட்டாரப் பகுதியினர்தான். கைதான 3 பேரில் ஒருவர் முன்கூட்டியே தமிழகம் வந்து தேவையான ஏற்பாடுகளை செய்து விடுவார். சென்னையில் இந்த ஆண்டு நடந்த செயின் பறிப்பில் 7 இடங்களில் நடந்த திருட்டுச் சம்பவங்களை கண்டுபிடித்துவிட்டனர். கடந்த வருடம் 34 செயின் பறிப்பு நடந்துள்ளது. அதில் 33 வழக்குகளைக் கண்டுபிடித்துவிட்டோம். தனிப்படை காவல்துறையினர் ஈரானிய கொள்ளையர்களைத் தேடிச் செல்வார்கள்.
நேற்று முன்தினம் காலை 4.15 விமானத்தில் சென்னை வந்து இறங்கியிருக்கிறார்கள். உடனே இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு 6 மணிக்கெல்லாம் குற்றத்தில் ஈடுபடத் தொடங்கி, மீண்டும் காலை 10 மணிக்கெல்லாம் விமானத்தில் ஏறிவிட்டார்கள். காவல்துறையினர் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு ஆங்காங்கே சோதனையில் ஈடுபடத் தொடங்கியதைத் தொடர்ந்துதான், மிக விரைவாக குற்றத்தை முடித்துக்கொண்டு அவர்கள் சென்னையை விட்டுப் புறப்பட்டுள்ளனர்.
இந்த ஈரானிய கொள்ளையர்கள் மகாராஷ்டிர மாநிலம் அபிவேலி பகுதியில் இருகிறார்கள். இவர்கள் சென்னையை விட்டுத் தப்பிச் சென்றிருந்தால், அபிவேலிப் பகுதிக்குள் சென்று இவர்களைப் பிடிப்பது மிகவும் கஷ்டம். குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு, உடைகளை மட்டும் மாற்றிக்கொண்டார்கள். ஷுவை மாற்றவில்லை அதை வைத்து எளிதாக அவர்களை அடையாளம் காண முடிந்ததாகவும் அருண் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
ரூ.32.90 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஹஜ் இல்லத்திற்கு இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் : அமைச்சர் சேகர் பாபு அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.49.70 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு மையக்கட்டிடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கே முழு உரிமை உள்ளது: ஐகோர்ட் மதுரை கிளையில் வாதம்
15 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; சமணர் காலத்து தூண் என்றும், தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில்
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
தே.மு.தி.க. மாநாடு 2.0: பிரேமலதா அழைப்பு
15 Dec 2025சென்னை, தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
-
பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
15 Dec 2025சென்னை, பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Dec 2025புதுக்கோட்டை, அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்று
-
பாமாயில், பருப்பு கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு
15 Dec 2025சென்னை, பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
-
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு
15 Dec 2025சென்னை, மாலத்தீவில் 2.12.2025 முதல் 6.12.2025 வரை நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கு 1 கோடி ரூபாயும், க
-
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மத்திய அரசு திட்டம்
15 Dec 2025புதுடெல்லி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்: ஜே.பி.நட்டா அறிவிப்பு
15 Dec 2025புதுடெல்லி, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார்.
-
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
15 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
ஈரோட்டில் நடைபெறவிருக்கும் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் பெண்களுக்கென தனி இடம்
15 Dec 2025சென்னை, ஈரோட்டில் த.வெ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


