எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஜெய்ப்பூர்: கோலி - பில் சால்ட் அதிரடியால் ராஜஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடர்...
18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்தது. பெங்களூரு தரப்பில் ஹேசல்வுட், குருனால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
174 ரன்கள் இலக்கு...
இதனையடுத்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன விராட் கோலி - பில் சால்ட் களமிறங்கினர். இதில் விரா கோலி நிதானமாக விளையாட பில் சால்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பில் சால்ட் 65 ரன்களில் (33 பந்துகள்) ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலியுடன் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இருவரும் மேற்கொண்டு விழாமல் பார்த்து கொண்டதுடன் பெங்களூரு அணியையும் வெற்றி பெற வைத்தனர்.
அசத்தல் வெற்றி...
இதன் மூலம் 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த பெங்களூரு 175 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. விராட் கோலி 62 ரன்களுடனும், படிக்கல் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் குமார் கார்த்திகேயா ஒரு விக்கெட் வீழ்த்தினார். நடப்பு தொடரில் பெங்களூரு அணி பதிவு செய்த 4-வது வெற்றி இதுவாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |