முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடரில் தனது வெற்றிக்கான ரகசியத்தை பகிர்ந்த பிரசித் கிருஷ்ணா

சனிக்கிழமை, 3 மே 2025      விளையாட்டு
Gujarat 11-04-2025

Source: provided

அகமதாபாத் : ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.

முதலிடத்தில்...

நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மிகவும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19 விக்கெட்டுகளுடன் நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ரகசியம் என்ன...?

ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: பவர்பிளேவில் 5-வது அல்லது 6-வது ஓவரில் பந்துவீசுவது எனக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு. ஆனால், இந்த பொறுப்பு எனக்கு புதிதாக தெரியவில்லை. ஏனெனில், ஒருநாள் போட்டிகளில் இதனை நான் செய்துள்ளேன். நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றி பெறவில்லையென்றால், அது சிறப்பானதாக இருக்காது.

தவறவிட்டேன்...

ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ளதை நினைத்து தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரை நான் தவறவிட்டேன். அதன் பின், மீண்டும் ஐ.பி.எல். தொடரில் இணைந்த பிறகு, நன்றாக பந்துவீச வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். குஜராத் டைட்டன்ஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன். 

சிறப்பான கேப்டனாக... 

குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறேன். அணியில் உள்ள அனைவரும் அவர்களது சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார்கள். ஷுப்மன் கில் அணியை நன்றாக வழிநடத்துகிறார். அவருக்கு யாரிடம் எதனைக் கூற வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. அணியின் திட்டங்கள் என்னவென்று அவருக்குத் தெளிவாக தெரிகிறது. அவர் வீரர்களுடன் தொடர்ந்து பேசுகிறார். அவர் கொடுக்கும் ஆலோசனைகள் உண்மையில் மிகவும் உதவியாக இருக்கிறது. அவர் ஒவ்வொரு நாளும் சிறப்பான கேப்டனாக மாறி வருகிறார்.

உதவியாக உள்ளன... 

ஆஷிஸ் நெஹ்ரா வீரர்களுக்கு மிகவும் உதவுகிறார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. ஆடுகளத்தை கணிப்பது, பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது குறித்து அவரது அறிவுரைகள் மிகவும் உதவியாக உள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து