எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டாஸ்மாக் வழக்கில் இடைக்கால தடைக்கு வாய் திறந்தவர், மற்ற வழக்குகளில் வாயை மூடிக்கொண்டது ஏன் என்று தயாநிதி மாறனுக்கு மாஜி அமைச்சர் அர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து எதிர்க்கட்சித்துணைத்தலைவரும் அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு தி.மு.க-வின் விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் . தயாநிதி மாறன், தமிழக விளையாட்டுத் துறைமந்திரியைப் போலவே விளையாட்டுத்தனமாக உளறல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.திமுக-விற்காக உழைத்த உண்மையான தொண்டர்கள் சந்தித்த எந்தவிதமான சிரமத்தையும் அனுபவிக்காமல் -உதாரணமாக, கொடி பிடிக்காமல், போஸ்டர் ஒட்டாமல், உண்ணாவிரதம் இருக்காமல், காவலர்களிடம் தடியடி படாமல், சிறை செல்லாமல்,தேர்தல் வேலை பார்க்காமல்,. முரசொலி மாறன் மகனாக பிறந்தஒரே காரணத்திற்காக நேரடியாக எம்.பி-ஆகவும், உடனே மத்திய அமைச்சராகவும்பதவி சுகத்தை அனுபவித்த. தயாநிதி மாறன், இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தையே முடக்கிய பெருமை\கொண்டவர், இத்தனை நாட்கள் இருந்த இடம் தெரியாமல் இருந்துவிட்டு, உச்சநீதிமன்றம் டாஸ்மாக் வழக்கிற்கு அளித்தஇடைக்காலத் தடையில், தேவையில்லாமல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டு,தனது இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
உங்களது தந்தை . முரசொலி மாறன் அப்போதைய மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசில், இந்தியவரலாற்றிலேயே இல்லாத வகையில் உடல் நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சுமார்ஓராண்டு காலம் இலாகா இல்லாத மந்திரியாக பதவி வகித்தபோது, அப்போது பாஜக-வை வானுயுர புகழ்ந்ததைமறந்துவிட்டீர்களா? இன்று திமுக அரசின் ஊழல்கள் மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டறியப்பட்டதைஏற்றுக்கொள்ள முடியாமல், அருவருக்கத்தக்க அவதூறு செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள்.\இதே சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அமலாக்கத் துறை `திமுக-வினர் டாஸ்மாக் மூலம் செய்த முறைகேடுகளைவிசாரிக்கலாம்’ என்று தீர்ப்பளித்தபோது, சப்பை கட்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதி மாறன் அப்போது எங்கேபோனார்? பம்மிக் கிடந்தவர்கள் யார்? முன்னாள் டாஸ்மாக் மந்திரி செந்தில் பாலாஜி வழக்கு, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு, பல பாலியல்குற்ற வழக்குகள், போதைப் பொருள் நடமாட்ட வழக்குகள் போன்றபல வழக்குகளில் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், திமுக அரசுக்கு குட்டு வைத்ததை வசதியாகமறந்துவிட்டாரா . தயாநிதி மாறன்.தற்போது இந்த ஒரு வழக்கின் இடைக்காலத் தடைக்கு வாயை திறந்துள்ள ‘ஒரிஜினல்’ சூராதி சூரர், சூனா பானாதயாநிதி மாறன், மற்ற வழக்குகளில் வாயை திறக்காதது ஏன்? மதுரையில் உங்களது தினகரன் நாளிதழ் அப்பாவிஊழியர்கள் மூவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் வாயைத் திறக்காத நீங்கள், இப்போது வாய் பேசுவதுவிந்தையிலும் விந்தை. அகால மரணமடைந்தவர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது.உச்சநீதிமன்றம் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தற்காலிக தடை வழங்கி உள்ளதற்கே இந்தஆட்டம், பாட்டம் தேவையில்லை. இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அமலாக்கத் துறைபதில் அளிக்கும்போது உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும்.\திமுக அரசு, டாஸ்மாக் விஷயத்தில் செய்த ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் என்பதை உணர வேண்டும். அப்போது நீங்கள் வெட்கித் தலைகுனியும் நிலையும் வரும் என்பதை உணர வேண்டும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
ரூ.32.90 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஹஜ் இல்லத்திற்கு இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் : அமைச்சர் சேகர் பாபு அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.49.70 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு மையக்கட்டிடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
15 Dec 2025சென்னை, பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Dec 2025புதுக்கோட்டை, அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்று
-
பாமாயில், பருப்பு கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு
15 Dec 2025சென்னை, பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
-
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மத்திய அரசு திட்டம்
15 Dec 2025புதுடெல்லி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்: ஜே.பி.நட்டா அறிவிப்பு
15 Dec 2025புதுடெல்லி, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார்.
-
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
15 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
ஈரோட்டில் நடைபெறவிருக்கும் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் பெண்களுக்கென தனி இடம்
15 Dec 2025சென்னை, ஈரோட்டில் த.வெ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


