முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவு சேதம் : நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச் தகவல்

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      உலகம்
IRAN 2025-06-14

Source: provided

இஸ்ரேல் : ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் அணுஆயு தங்களை தயாரி ப்பதாகவும், அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய அணு மையங்கள் தகர்க்கப்பட்டதுடன், அணுஆயுத விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஈரானும் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங் கள் கடும் சேதமடைந்தன. குறிப்பாக இஸ்ரேலின் வான் கவச பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியது அந்நாட்டை அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை இயக்குநர் ஷே அகரனோவிச் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் 3 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். எனினும் சேதமடைந்த இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆயுதங்களை கணக்கெடுத்தால் சேத மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச் கூறுகையில், போரின் காரணமாக இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து