முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 18 பேர்

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      உலகம்
Pak 2025-06-27

Source: provided

லாகூர் : பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆற்றில் வெள்ளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேரை இழுத்து சென்றது. இதில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் இழுத்துச் செல்லப்பட்டனர். மீட்புப் படையினர் ஐந்து வெவ்வேறு இடங்களில் அவர்களை தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 18 பேரில் யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது. ஸ்வாட் ஆறு, பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வற்றாத நதிகளில் ஒன்றாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து