முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்த தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் தான் இருப்போம் : திருமாவளவன் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      தமிழகம்
Thirumavalavan 2024-12-16

Source: provided

திருச்சி : குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைமையிலான 2 அணிகளுக்கான மோதலாக தான் அமையும். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. இருப்பதால் அதனை வீழ்த்த வேண்டிய அவசியம் உள்ளது. எங்களுக்கு சீட்டு குறைவது பிரச்சனை இல்லை. நாங்கள் ஆண்ட கட்சியும் கிடையாது. ஆனால் ஆண்ட கட்சி 75 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் கட்சி. தேய்மானம் அடைவதற்கு அ.தி.மு.க. உடன்படுகிறதா?  அண்ணா, பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அவர்களுடன் பயணிப்பது தற்கொலைக்கு சமம்.

பெரியாரை விமர்சித்த பின்னர் விஜய் அமைதியாக இருப்பது ஏன்? திரை உலகில் போதை கலாச்சாரத்தால் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியான ஒன்று.    தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என்ற ஒரு நிலை வந்தால் அப்போது அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன். பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். எங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம்.  

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து