முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? - செல்வப்பெருந்தகை விளக்கம்

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      தமிழகம்
Selvaperundhai 2024-04-19

Source: provided

திண்டிவனம் : பா.ம.க. தி.மு.க. கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.

திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (ஜூன் 27) சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு.  அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு செல்கிறேன். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்தோ, அரசியல் குறித்தோ இல்லை.  அன்புமணி- ராமதாஸ் சமாதானமாக இருந்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பா.ம.க. தி.மு.க. கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,  இதை  முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்ய வேண்டும் என்றார். பா.ம.க.வில் நிலவும் பிரச்சினைக்கு தி.மு.க.தான் காரணம் என்ற அன்புமணி ராமதாஸின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “  பா.ம.க.வில் நிலவும் பிரச்சினைக்கு தி.மு.க.தான் காரணம் என்று அன்புமணி புரிதல் இல்லாமல் சொல்கிறார். பா.ஜ.க.வை சமாதானப்படுத்துவதற்காக அன்புமணி அவ்வாறு கூறியிருப்பாரே தவிர, அவருடை உள்மனது அப்படி சொல்லாது.

பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பா.ஜ.க.தான் காரணம். பா.ஜ.க. தான் எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறார்களோ, அந்த கட்சியை உடைத்துவிடுவார்கள். அந்த கட்சியை ஸ்வாஹா செய்துவிடுவார்கள். அடுத்தது அதி.மு.க.வை ஸ்வாஹா செய்யப் போகிறார்கள். கூட்டணி என்று சொல்லிவிட்டு, அதி.மு.க.வின் தலைமைக் கர்த்தாவான அண்ணாவையும், பெரியாரையும் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிடுகின்றனர். அதற்கு பெயர் என்ன?” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து