முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. கூட்டணியில் விஜய் இணைவாரா? - காத்திருங்கள் என அமித்ஷா பதில்

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      இந்தியா
Amit-Shah 2023-11-26

Source: provided

புதுடெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்ற கேள்விக்கு காத்திருங்கள் என அமித்ஷா பதிலளித்தார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா  தமிழக நாளிதழ்களுக்கு  அளித்த சிறப்பு பேட்டியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள்; அனைத்தும் தெளிவாகிவிடும்" என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா..? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜனதா கட்சியின் பங்கு இருக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல்வர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்" என்று அமித்ஷா கூறினார்.

அடுத்ததாக, நீங்கள் அ.தி. மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறீர்கள்? என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் யாரையும் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்களது கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி குறித்து நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "என் நம்பிக்கை என்னவென்றால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது" என்று அமித்ஷா பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து