முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரூக்குக்கு ரிஷப் பதிலடி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      விளையாட்டு
Rishabh-Pant--------

Source: provided

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.  பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி  6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.  இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி  இங்கிலாந்து அணி ஆடியது.

முன்னதாக இப்போட்டியில் 4வது நாளில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 10 ரன்னில் இருக்கையில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ரிஷப் 48 பந்துகளில் தனது 16-வது அரைசதத்தை எட்டினார். அந்த சமயத்தில் அதிரடியாக விளையாடிய பண்டின் கவனத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஸ்லிப் பகுதியில் நின்றுக்கொண்டு சீண்டினார். அதற்கு ரிஷப் பண்ட் தக்க பதிலடி கொடுத்தார். இது குறித்து அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் பின்வருமாறு:- ஹாரி புரூக்: உங்களுடைய வேகமான சதம் என்ன?ரிஷப் பண்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டிலா? 80-90 பந்துகள்

புரூக்: நான் 55 பந்துகளில் வேகமான சதம் அடித்துள்ளேன். நீங்களும் இன்று அதைச் செய்யலாம்.

ரிஷப் பண்ட்: பரவாயில்லை. எனக்கு சாதனைகள் மீது அவ்வளவு பேராசை இல்லை. அது நடந்தால் நடக்கட்டும். இவ்வாறு அவர்களுக்கு இடையிலான உரையாடல் அமைந்தது. 

விராட் கோலி வாழ்த்து

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 180 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆடிய இந்தியா 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்த கில் 2 ஆவது இன்னிங்சில் 161 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்தார்.  எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 430 ரன்கள் குவித்த கேப்டன் கில்க்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். கோலி தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "அருமை ஸ்டார் பாய். வரலாற்றை மாற்றும் ஒரு ஆட்டத்தின் தொடக்கம் மேலும் மேலும் வளரட்டும். எல்லா பாராட்டுகளுக்கும் நீ தகுதியானவன்" என்று தெரிவித்துள்ளார். 

தங்கம் வென்ற சோப்ரா 

இந்திய நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா பெங்களூருவில் தனது பெயரில் நடைபெற்ற முதல் 'நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025' போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் நீரஜ் போட்டியிடுவதைக் காண ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில், நீரஜ் ஒரு தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சனிக்கிழமை நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், நீரஜ் தனது மூன்றாவது முயற்சியில் 86.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். கென்யாவின் ஜூலியஸ் யெகோ 84.51 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இலங்கை தடகள வீரர் ருமேஷ் பதிரேஜ் 84.34 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய தடகள வீரர் சச்சின் யாதவ் 82.23 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார். நீரஜ் சோப்ரா இந்தப் போட்டியின் அமைப்பாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது

ஆட்ட நாயகன் மெஸ்ஸி

அமெரிக்காவில் நடைபெறும் எம்.எல்.எஸ். தொடரில் லியோனல மெஸ்ஸி (38 வயது) இரண்டு கோல்கள் அடித்து இன்டர் மியாமிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமி அணி பி.எஸ்.ஜி.யுடன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வியுற்றது. இந்தத் தோல்விக்குப் பிறகு எம்.எல்.எஸ். தொடரில் இன்டர் மியாமி அணி மாண்ட்ரியல் அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 4-1 என வென்றது. லியோனல் மெஸ்ஸி இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்தப் போட்டியில் முதல் 2-ஆவது நிமிஷத்திலேயே மாண்ட்ரியல் அணியின் பிரின்ச்ஸ் ஓவ்சு கோல் அடித்து அசத்தினார். அதற்குப் பதிலடியாக மெஸ்ஸி உதவியினால் அல்லெண்டா 33-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இந்தப் போட்டி 1-1 என சமநிலையில் இருக்கும்போது மெஸ்ஸி தனது வழக்கமான அற்புதத்தை நிகழ்த்தி 40-ஆவது நிமிஷத்திலும் 62-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார். குறிப்பாக 62-ஆவது நிமிஷத்தில் எதிரணியினர் 6-7 வீரர்களை ட்ரிப்ளிங் செய்து மெஸ்ஸி அடித்த கோல் அவரை 2011-இல் பார்த்ததுபோல் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

அரையிறுதியில் ரியல் மாட்ரிட் 

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நியூஜெர்சியில் இந்திய நேரப்படி நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் - டார்ட்முன்ட் அணிகள் மோதின. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதியதால் இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும் ரியல் மாட்ரிட் 3-2 என்ற கோல் கணக்கில் டார்ட்முன்ட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இதில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) 2-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் பிஎஸ்ஜி - ரியல் மாட்ரிட் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து