முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறந்து போ திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025      சினிமா
Fly-Away 2025-07-07

Source: provided

தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம். மிர்ச்சி சிவாவும் அவரது மனைவி கிரேஸ் ஆண்டனியும் தங்களது மகனை பெரிய பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். அவன் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து அவன் எதைச் செய்தாலும் பாராட்டுகிறார்கள். ஆனால் அவனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை அறியாமல் வாழ்கிறார்கள் என்பதனை ஓர் அழகான படைப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ராம்.   இருசக்கர வாகனத்தில் தன் மகனுடன் பயணிக்கும் சிவா, அவனது விருப்பம் பற்றி எப்படி தெரிந்துக் கொள்கிறார் என்பதை சிரித்து மகிழும்படி சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராம். சிவா எபோதும் போல் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பதோடு, தனது டைமிங் வசனங்கள் மூலம் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறார். சிவாவின் மகனாக நடித்திருக்கும் மித்துல் ரியான், குறும்புத்தனத்தால் ரசிக்கவும் சில இடங்களில் புலம்பவும் வைக்கிறார். கிரேஸ் ஆண்டனி, நடிப்பு மற்றும் நகைச்சுவை இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி மற்றும் அவரது கணவராக வரும் அஜு வர்கீஸின் நடிப்பு கைதட்டல் பெறுகிறது. நாம் சாதாரணமாக கடந்து செல்லும் மலைகள், மரங்கள் என அனைத்தையுமே ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அருமை. பிள்ளைகளின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களின் உலகம் ஆகியவற்றுடன் நம்மையும் பயணிக்க வைத்து ரசிக்க வைத்து பறந்து போக வைத்து விடுகிறார் இயக்குனர் ராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து