முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025      அரசியல்
EPS-1-2025-07-07

கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும்  விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி தனது முதலாவது பிரச்சாரப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று (ஜூலை 7) தொடங்கினார். இதையொட்டி நேற்று காலை தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் பழனிசாமி தரிசனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து தேக்கம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாய அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:  சொட்டுநீர் பாசன திட்டத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க. தான்.  கால்நடை மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சியில் தான்.  ஆனால், அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் எல்லாம் கிடப்பில் போடப்பட்டது.

எங்கள் ஆட்சியில், மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கினோம்.வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்ததோம். வனவிலங்குகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகளை உடனடியாக மதிப்பீடு செய்து அதன் இழப்பீட்டை வழங்கியது நான் முதல்வராக இருந்தபோதுதான்.

தி.மு.க. ஆட்சியில் நான்கு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அண்டை மாநிலமான கேரள மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நீர் பிரச்சினையை தீர்க்க வழி வகுத்தோம். தற்போது ஆட்சி மாற்றம் ஆன பிறகு அந்தப் பிரச்சினை குறித்து இந்த அரசு பேசவோ, அல்லது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவோ இல்லை.

அ.தி.மு.க. அரசாங்கம் என்பது மக்களுக்கான அரசாங்கம், விவசாயிகளுக்கான அரசாங்கம்.  எப்போதும் நாங்கள் விவசாயிகளுடன்; மக்களுடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து