முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025      இந்தியா
Rajnath-Singh 2023-11-14

புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகம் சார்பில் 3 நாள் நடக்கும் மாநாடு நேற்று தொடங்கியது. இதனை தொடங்கி வைத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவம் மற்றும் உள்நாட்டு ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது; இன்று உலகமே நமது பாதுகாப்புத்துறையை திரும்பிப் பார்க்கின்றன. ஆபரேஷன் சிந்தூரின் மூலம் நமது ராணுவ வீரர்களின் வீரம் வெளிப்பட்டது. அதேபோல, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நமது ராணுவ தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச ராணுவ செலவு 2.7 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம், மிகப்பெரிய வர்த்தகம் நமக்காக உருவாக இருக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் உலகின் பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம். மக்களின் வருமானத்தில் ஒரு பெரும் பங்கு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படுவதால், நமது பொறுப்பு மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, பட்ஜெட்டை சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம், இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து