முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இல்லாத இடத்திற்கு விளம்பரம்: சிக்கலில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025      சினிமா
Mahesh-Babu

ரங்காரெட்டி, தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்து, நில மோசடி வழக்கில் சிக்கியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்த தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, அதில் இல்லாத ஒரு இடத்தின் பெயரையும் குறிப்பிட்டு நடித்துள்ளார். இதனை நம்பி முதலீடு செய்த ஒருவர், தான் நஷ்டம் அடைந்ததாக தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை சார்பில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட பண மோசடி விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமத்தின் பிராண்ட் அம்பாஸ்டராக அவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகேஷ் பாபு பணம் மற்றும் செக் மூலமாக ரூ.5.9 கோடிகள் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் பணம் மட்டுமல்லாமல், சட்ட விரோதமாக வேறு ஏதேனும் பொருள் அல்லது அசையும், அசையா சொத்தும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரித்து வருகிறது.

மேலும், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமத்தின் ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்த மகேஷ்பாபு, அதில் அவர் பயன்படுத்திய பெயர்களில் இல்லாத ஒரு இடத்தின் பெயரையும் சொல்லியுள்ளார். அதுதான் தற்போதைய பிரச்னைக்கு காரணம். மருத்துவர் ஒருவர் அளித்த புகாரில், நடிகரை நம்பி முதலீடு செய்ததில் ரூ.34.8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என குறிப்பிட்டு ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில், மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விரைவில் விசாரணைக்கு ஆஜராகலாம் என்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து