முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025      உலகம்
Trump 2024-12-21

Source: provided

வாஷிங்டன் : இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பல்வேறு நாடுகளுக்கான வரியை கிடுகிடுவென உயர்த்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், பின்னர் இந்த வரிவிதிப்பு முடிவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்த அவகாசம் வரும் 9-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள அவர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும், , 12 நாடுகளுக்கான புதிய வரிவிதிப்புக்கான கடிதங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும், நேற்று இரவு அது பற்றிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது, இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே, அமெரிக்க டாலருக்கு மாற்றாக, பொது கரன்சியை உருவாக்க நினைத்தால், பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து