முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா; 80 எம்.பி.க்கள் ஆதரவு

திங்கட்கிழமை, 7 ஜூலை 2025      இந்தியா
Dalai-Lama-2023-12-14

Source: provided

புதுடில்லி : புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆதரவாக 80 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

திபெத்தை சேர்ந்த புத்த மதத்தலைவர் தலாய் லாமா, சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து ஹிமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறார். 90 வயதான தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என திபெத் தொடர்பான இந்திய பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு 80 எம்.பி.,க்கள் ஆதரவாக கையெழுத்திட்டு உள்ளனர்.

திபெத் தொடர்பான அனைத்துக் கட்சி இந்திய பார்லிமென்ட் மன்றம், திபெத் அரசின் பிரதிநிதிகளை பலமுறை சந்தித்துள்ளது. இந்த குழுவின் ஒருகிணைப்பாளராக உள்ள பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., சுஜீத் குமார் கூறியதாவது: ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி 80 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு உள்ளனர். 100 எம்.பி.க்களின் கையொப்பங்களைச் சேகரித்து முடிந்தவுடன் சமர்ப்பிக்கப்படும். இந்த குறிப்பாணையில் கையொப்பமிட்டவர்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் அடங்குவர். தலாய் லாமாவின் புதிய வாரிசை நியமிப்பதில் சீனாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மன்றம் உறுதியாக நம்புகிறது. திபெத் தொடர்பான பிரச்னைகளை எழுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து