முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்புமணி இனி என் பெயரை பயன்படுத்தக் கூடாது: ராமதாஸ்

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      தமிழகம்
Ramadoss-1

கும்பகோணம், ‘என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக்கூடாது. வேண்டுமானால் என் இனிஷியலைப் போட்டுக் கொள்ளலாம்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்

கும்பகோணத்தில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்க தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பொதுச் செயலாளர் முரளி சங்கர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ், “ என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக் கூடாது. வேண்டுமானால் என் இனிஷியலை போட்டுக் கொள்ளலாம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள்.  

நாட்டின் வளர்ச்சிக்கும், வீட்டின் வளர்ச்சிக்கும் உழைப்பவர்கள் பாட்டாளி மக்கள் தான். பூம்புகாரில் ஆக.10-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டுக்கு அனைவரும் வரவேண்டும். சுமார் 2 லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள்” என்றார் ராமதாஸ்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நடைபெறும் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக பிரம்மாண்டமாக இருக்கிறது. எனது பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை போடக் கூடாது. ஆனால், இனிஷியல் மட்டும் போடலாம். மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலினுக்கு, அன்புமணி மீது உள்ள பாசம் போகாததால், அவரது புகைப்படத்தை கூட்ட மேடையில் வைத்துள்ளார்” என்றார்

ராமதாஸும், அன்புமணியும் இணைந்து செயல்பட்டால் கண்ணுக்கு அழகு என பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியிருப்பது குறித்து கேட்டபோது, “ அவர் அவருடைய ஆசையை கூறியுள்ளார்” என்றார். இந்த ஆசை நிறைவேறுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “போக போகத் தெரியும்” என்ற பாடலை பாடியபடி அவர் எழுந்து சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து