முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயக்கூத்து திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      சினிமா
Mayakkuthu 2025-07-14

Source: provided

எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார். அதில் ஒரு தாதா, வீட்டு வேலை செய்யும் ஒரு ஏழை பெண், நீட் தேர்வுக்கு தயாராகும் ஒரு மாணவி,  நடுத்தர குடும்ப பெண் என 4 கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். இந்த கதாபாத்திரங்களின் பின்னணி மற்றும் நியாயங்களை இவரது மனம் சொல்லும் யோசனைப்படி உருவாக்குகிறார். ஒரு நாள் இவர் கதையில் உருவாக்கிய 4 கதாபாத்திரங்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். எங்கே சென்றாலும் எழுத்தாளர் நாகராஜனை பின் தொடர்கிறார்கள். இது உண்மையா இல்லையா என்று குழம்பும் நாகராஜன், தன் கதை மூலமாகவே இந்த சிக்கலுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார். அதன் பிறகு நடப்பவைகளை சுவாரஸ்யமான திரைக்கதையோடு சொல்வது தான் ‘மாயக்கூத்து’.

கதையின் நாயகனாக எழுத்தாளர் வாசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகராஜன் கண்ணன் ஒரு எழுத்தாளராக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.  டெல்லி கணேஷ், ரேகா, குமனன், காயத்ரி, பேராசிரியர் மு.ராமசாமி, தீனா ஆகியோரின் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அஞ்சனா ராஜகோபாலன் இசை பாராட்டுகுரியது. கதையில் உள்ள கதாபாத்திரங்கள் நேரில் தோன்றினால் என்ன நடக்கும் என்ற வித்தியாசமான முயற்சியை நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா படத்துடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து