முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      இந்தியா
ahmedabad-plane-crash-3

Source: provided

புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ. தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான முதற்கட்ட அறிக்கை கடந்த 12-ம் தேதி வெளியானது. இதையடுத்து, ஏர் இந்தியாவின் சி.இ.ஓ. கேம்பல் வில்சன், நிறுவன சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “விமான விபத்து நிகழ்ந்த பிறகு சில நாட்களுக்குள் ஏர் இந்தியாவின் ஒவ்வொரு போயிங் 787 விமானமும் சரிபார்க்கப்பட்டது. அனைத்து விமானங்களும் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருந்தன. தேவையான அனைத்து சோதனைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்கிறோம். தற்போது வெளியாகி உள்ள முதற்கட்ட அறிக்கையில், விமானத்தில் இயந்திரவியல் மற்றும் பராமரிப்பு சார்ந்த பிரச்சினைகள் இருந்ததாக சுட்டிக்காட்டப்படவில்லை. ஏனெனில், அனைத்து கட்டாய பராமரிப்புப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. விசாரணை இன்னும் முடியவில்லை. அதுவரை, முன்கூட்டியே முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முழுமையான, விரிவான விசாரணையை நடத்த தேவையான அனைத்தையும் விசாரணை அதிகாரிகள் பெறுவதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஒத்துழைப்போம்” என கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து