முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      விளையாட்டு
Lara

Source: provided

போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.

ஒயிட்வாஷ்...

வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது. பிங்க் பாலில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டின் 2ஆவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 26 ரன்னில் சுருண்டது. இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் டெஸ்ட் கிரிக்கெட்டை மீட்டெடுக்க, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்த முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தரம் குறைந்து வருகிறது...

இந்த நிலையில் ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது. டி20 லீக்குகளில் இடம் பிடிப்பதற்காf, தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என லாரா தெரிவித்துள்ளார்.

படிக்கல்லாக...

இது தொடர்பாக லாரா கூறியதாவது:- நாங்கள் முதல்-தர கிரிக்கெட்கள் விளையாடினோம். சில வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடிப்பதற்காக கவுன்ட்டி கிரிக்கெட்டில் கூட விளையாடினார்கள். தற்போது லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தங்களை பெறுவதற்னாக படிக்கல்லாக வெஸ்ட் இண்டீஸ் அணியை பயன்படுத்துகின்றனர். இது வீரர்களின் தவறு கிடையாது. இவ்வாறு லாரா தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோஸ் பூரன், டி20 லீக்குகளில் விளையாடுவதற்காக 29 வயதிலேயே ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து