முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      விளையாட்டு
Pragnananda 2023-08-23

Source: provided

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் லாஸ் வேகாஸில் நேற்று நடைபெற்ற 4வது சுற்றில் நம்பர் 1 வீரரான மார்க்ஸ் கார்ல்சன் ( நார்வே ), பிரக்ஞானந்தா ( இந்தியா ) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார் . சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார் . இதனால் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார்

இளையோர் முதல் டெஸ்ட் டிரா

இந்தியா -இங்கிலாந்து ஜூனியர் கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெக்கன்ஹாமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில்  540 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.  இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி  439 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.  

பின்னர் 101 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 4-வது மற்றும் கடைசி நாளில் 7 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.  இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செல்ம்ஸ்போர்டில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.

அதிகம் யோசிக்கவில்லை: தீப்தி 

இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நேற்று முன்தினம் (ஜூலை 16) தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்த தீப்தி சர்மா, ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை என தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை பொருத்தவரையில், ஒரு அணியாக இலங்கை மற்றும் இந்தியாவில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. அதனால், உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை. ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார். ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

 

ஆஸி. வீரர்கள் ஆதிக்கம் 

கிரிக்கெட் உலகில் அதிகமான உலகக் கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தி வருகிறது. கடந்த 2021- 23 சீசன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸி. சமீபத்தில் 2023-25 சீசனில் தென்னாப்பிரிக்காவிடம் இறுதிப் போட்டியில் தோற்றது. தற்போது, மேற்கிந்தியத் தீவுகளுடன் உடனான டெஸ்ட் தொடரில் 3-0 என அபாரமாக வென்றது. குறிப்பாக, கடைசி டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. அதில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை கடைசி இன்னிங்ஸில் 27 ரன்களுக்கு சுருட்டி ஆதிக்கம் செலுத்தியது. 

இந்நிலையில், ஐ.சி.சி. தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆஸ்திரேலியாவின் 5 பந்துவீச்சாளர்கள் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் டாப் 10-க்குள் இடம் பிடித்துள்ளார்கள். ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை வருமாறு., 1. ஜஸ்ப்ரீத் பும்ரா - 901 புள்ளிகள் (இந்தியா),2. ககிசோ ரபாடா - 851 புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா), 3. பாட் கம்மின்ஸ் - 838 புள்ளிகள் (ஆஸ்திரேலியா), 

4. ஜோஷ் ஹேசில்வுட் - 815 புள்ளிகள் (ஆஸ்திரேலியா), 5. நோமன் அலி - 806 புள்ளிகள் (பாகிஸ்தான்), 6. ஸ்காட் போலண்ட் - 784 புள்ளிகள் (ஆஸ்திரேலியா), 7. மாட் ஹென்றி - 782 புள்ளிகள் (நியூசிலாந்து), 8. நாதன் லயன் - 769 புள்ளிகள் (ஆஸ்திரேலியா),

9. மார்கோ யான்சென் - 767 புள்ளிகள் (தென்னாப்பிரிக்கா), 10. மிட்செல் ஸ்டார்க் - 766 புள்ளிகள் (ஆஸ்திரேலியா).

 

மே.இ.தீவுகள் வீரர் ரஸல் ஓய்வு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 2019 முதல் விளையாடி வரும் ஒரே மூத்த வீரரான ரஸல் (வயது 37) ஜமைக்காவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருடன் ஓய்வுபெறவுள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், ரஸலின் ஓய்வு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இவர், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 84 டி20, 56 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஓய்வு தொடர்பாக ரஸல் தெரிவித்ததாவது: ”மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என் வாழ்க்கையில் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும். வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த நிலைக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் விளையாட விரும்புகிறேன். கரீபிய மண்ணில் இருந்து வரும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் அதே வேளையில், எனது சர்வதேச வாழ்க்கையை உயர்வாக முடிக்க விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல்., பி.பி.எல்., பி.எஸ்.எல். போன்ற லீக் தொடர்களில் ரஸல் தொடர்ந்து விளையாடவுள்ளார்.

இளம் வீரருக்கு மெஸ்ஸியின் ஜெர்ஸி

பார்சிலோனா அணியின் புதிய நம்.10 ஜெர்ஸி இளம் வீரர் லாமின் யமாலுக்கு வழங்கப்பட்டது. ஸ்பெயினைச் சேர்ந்த லாமின் யமால் (18 வயது) பார்சிலோனா அணிக்காக 2023ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். பார்சிலோனா அணியில் ஃபார்வேடாக விளையாடும் லாமின் யமால் 25 கோல்கள், 34 அசிஸ்ட்ஸ் செய்துள்ளார். ஸ்பெயினின் தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

மெஸ்சியின் எண்ணான நம்.10 கொண்ட ஜெர்ஸியை தற்போது லாமின் யமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. பார்சிலோனா அணியில் லாமின் யமாலுக்கு 6 ஆண்டுகள் (2031 வரை) ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட லாமின் யமால் தனது பாட்டியை அழைத்து வந்தார். முதன்முதலாக பார்சிலோனாவின் பயிற்சி கூடமான லா மசியாவில் இவரைச் சேர்த்ததுமுதல் இவரது பாட்டி உடன் இருந்திருக்கிறார். அதனால், அவரை வரவழைத்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். பார்சிலோனா அணிக்கு அடுத்த மெஸ்ஸியாக வருவார் என ரசிகர்கள் இவரது திறமையைப் பார்த்துப் புகழ்ந்து வருகிறார்கள்.

டெஸ்ட் தரவரிசையில் ஜோ ரூட் முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (888 புள்ளி) மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் சதம் (104 ரன்) அடித்ததன் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.. இதே டெஸ்டில் 11 மற்றும் 23 ரன் வீதம் எடுத்து சொதப்பிய புரூக் 862 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (867 புள்ளி) 2-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

இந்திய வீரர்களான ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்திலும் (801 புள்ளி), ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு), கேப்டன் சுப்மன் கில் 9-வது இடத்திலும் (3 இடங்கள் பின்னடைவு) உள்ளனர். அதே சமயம் லார்ட்ஸ் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் அரைசதம் விளாசிய ரவீந்திர ஜடேஜா 5 இடங்கள் உயர்ந்து 34-வது இடத்தையும், முதல் இன்னிங்சில் சதமடித்த லோகேஷ் ராகுல் 5 இடங்கள் அதிகரித்து 35-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து