Idhayam Matrimony

பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      விளையாட்டு
Pragnananda 2023-08-25

Source: provided

உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் பிரீ ஸ்டைல் செஸ் தொடரில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43வது நகர்வில் வெற்றி பெற்றார். கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.

_______________________________________________________________________________

சேவாக் சாதனை முறியடிக்கப்படுமா..?

இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 4 ஆவது டெஸ்ட் போட்டியில் 3 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ரிஷப் பண்ட் படைப்பார். தற்போது ரிஷப் பண்ட் 88 சிக்சர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் விளாசிய 2 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித்துடன் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் 90 சிக்சர்கள் விளாசி சேவாக் முதல் இடத்தில உள்ளார். 

_______________________________________________________________________________

இந்திய டெஸ்ட் அணியில் அன்ஷுல் 

இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் காயமடைந்துள்ளதால், சி.எஸ்.கே. வீரர்இந்திய அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய கம்போஜ் சிறப்பாக பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா பின் தங்கிய நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

_______________________________________________________________________________

உலக கோப்பை செஸ்: ஹம்பி வெற்றி

பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட் டங்கள் நேற்று தொடங்கியது. முதல் முறையாக 4 இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார். அவர் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார். இன்று 2-வது போட்டியை 'டிரா' செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.

சென்னை கிராண்ட்மாஸ் டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார்.இந்த ஆட்டம் 72-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனைகள் திவ்யா-ஹரிகா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, தொடக்கத்தில் முந்தினார். பின்னர் 31-வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சம நிலையில் இருந்தனர்.

_______________________________________________________________________________

பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

இதில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஆடும் முதல் டி20 போட்டி இதுவாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து