முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் நிலையங்களில் 'ரீல்ஸ்' எடுத்தால் ரூ.ஆயிரம் அபராதம் ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      தமிழகம்
Railway-sta

Source: provided

சென்னை: ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய காலத்தில், மொபைல் போனில், வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு லைக்ஸ், கமென்ட்களை பெறுவதற்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதற்கு ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை ரீல்ஸ் எடுப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.  

ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்கும் போது அஜாக்கிரதையால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்க ரயில்வே துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  ஆனாலும் இந்த செயல் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் ரயில் நிலையங்களில் மொபைல் போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: விதிகள் படி ரயில் நிலையங்களில் புகைப்படம் மட்டுமே எடுக்கலாம். ஆனால் சிலர் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. ரயில் நிலையங்கள், தண்டவாளயங்கள் ஆகியவற்றில் மொபைல் போனில் ரீல்ஸ்  எடுத்தால் ரூ 1,000 அபராதம் விதிக்கப்படும். பயணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் ஈடுப்பட்டால் கைது செய்யப்படுவார்கள்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து