முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவு ரூ.295 கோடி

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு 4 ஆண்டுகளில் ரூ.295 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் பதிலளித்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2024 வரை பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு சுமார் ரூ.295 கோடி என தெரிவித்து இருந்தார். மேலும் இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்பட 5 நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களுக்கு ஆன செலவு ரூ.67 கோடி எனவும், மொரீஷியஸ், சைப்ரஸ், கனடா, குரேஷியா, கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா போன்ற நாடுகளுக்கு இந்த ஆண்டு அவர் மேற்கொண்ட பயணச்செலவு குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த பயணங்களில், மிகவும் அதிகமானது பிரான்சுக்கு ரூ.25 கோடிக்கு மேல் செலவானது என்றும், அதே நேரத்தில் ஜூன் 2023 இல் மோடி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்திற்கு ரூ.22 கோடிக்கு மேல் செலவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து