முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத வழிபாட்டு தலங்களுக்கு மின் கட்டணத்தில் பாகுபாடு ஏதும் இல்லை: தமிழக அரசு

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, பொது வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது என தமிழக அரசு  விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு தமிழக அரசு மின் கட்டணத்தில் பாகுபாடு காட்டுவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தனது சமூக தலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இது கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே பரப்பப்படுகிறது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்தும் 'பொது வழிபாட்டு தலங்கள்' என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது.

2024-ம் ஆண்டு கட்டண விதிப்பின்படி, கோவில், மசூதி மற்றும் தேவாலயம் உள்ளிட்ட பொது வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.6.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 120 யூனிட்டுக்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.3.13 மானியம் அளிக்கிறது. வதந்தியை பரப்பவேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து