முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்ல உரை நிகழ்த்தும் எம்.பி.,க்கள் செய்தியில் இடம் பெறுவதில்லை: கிரண் ரிஜூஜூ வருத்தம்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      இந்தியா
Kiran-Rijiju 2023-01-16

புதுடில்லி, பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் எம்.பி.,க்கள் தலைப்புச் செய்தியாக மாறுகிறார்கள். ஆனால் நல்ல உரை நிகழ்த்தும் எம்.பி.,க்கள் செய்தியில் இடம் பெறுவதில்லை என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பி.,கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த சூழலில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது:

பார்லிமென்டில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் எம்.பி.,க்கள் தலைப்புச் செய்தியாக மாறுகிறார்கள். அதே நேரத்தில் நல்ல உரை நிகழ்த்தும் எம்.பி.,க்கள் செய்தியில் இடம் பெறுவதில்லை. 2007ம் ஆண்டுகளில், சரத் பவார் அப்போது வேளாண் அமைச்சராக இருந்தார். விவசாயம் குறித்து ஒரு விவாதம் நடந்தது. அவருக்கு நல்ல விவசாயக் கொள்கை இருந்தது. பல எம்.பி.க்கள் நன்றாகப் பேசினர். மறுநாள், எந்த செய்தித்தாளும் சரத் பவாரின் பெயரை வெளியிடவில்லை.  அது செய்தியாகாத போது அல்லது மக்கள் அதை விரும்பாதபோது நீங்கள் எப்படி ஒரு நல்ல வேலையைச் செய்ய முடியும்? எனவே, எம்.பி.க்கள் தலைப்புச் செய்திகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஏனெனில் ஒரு நல்ல உரையை நிகழ்த்தி நல்ல வேலையைச் செய்வதன் மூலம், தொகுதி மக்களுக்கு அது பற்றித் தெரியாது. பொதுமக்களும் அதைக் கேட்பதில்லை, அது செய்திகளில் வருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் சூழலில், தனது அதிருப்தியை கிரண் ரிஜிஜூ வெளிப்படுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து