முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வுக்குப் பிறகு எந்த அரசு பதவியையும் ஏற்க மாட்டேன்: நீதிபதி கவாய் திட்டவட்டம்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      இந்தியா
Justice-Kawai-2025-07-26

மும்பை, 'ஓய்வுக்குப் பின் எந்த அரசு பதவியையும் ஏற்க மாட்டேன்' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான தாராபூரில், நடந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் பேசியதாவது: தனது சொந்த கிராமத்தில் தலைமை நீதிபதியாக அல்ல, சொந்த மாவட்டத்தில் வசிப்பவன் போல் இருக்கிறேன்.  ஓய்வுக்குப் பிறகு எனக்கு அதிக நேரம் கிடைக்கும், எனவே தாராபூர், அமராவதி மற்றும் நாக்பூரில் அதிக நேரம் செலவிட முயற்சிப்பேன். மக்களுக்கு எளிதில் நீதி கிடைக்க வேண்டும். நீதிபதி நியமனங்களை விரைவு படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்த முயற்சி செய்து வருகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.

கேரளா மற்றும் பீகார் கவர்னராக பணியாற்றிய தனது தந்தை ஆர்.எஸ். கவாயின் 10வது நினைவு தினத்தை யொட்டி, அவர் தனது சொந்த கிராமத்தில் ஒரு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது தான், வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் ஓய்வுக்குப் பிறகு உள்ள திட்டங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து