முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்தீப் யாதவ் இடம்பெறாதது ஏன்? - இந்திய அணி பயிற்சியாளர் விளக்கம்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      விளையாட்டு
Morne-Morkel 2025-07-26

Source: provided

மான்செஸ்டர் : 4-வது டெஸ்டில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது குறித்து இந்திய பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.

ஓல்டு டிராப்போர்டில்... 

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

இங்கி. 669 ரன்கள்... 

பின்னர் தனது முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து  669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஜோ ரூட் 150 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் எடுத்தனர். பென் டக்கெட் (94 ரன்கள்), ஸாக் கிராலி (84 ரன்கள்), ஆலி போப் (71 ரன்கள்) எடுத்தனர். 

குல்தீப் இல்லை...

முன்னதாக இந்த போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல முன்னாள் வீரர்களும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டுமென கூறினர். ஆனால் அவரை சேர்க்காத இந்திய அணி அறிமுக வீரர் அன்ஷுல் கம்போஜை அணியில் சேர்த்துள்ளது.

உலகத் தரம் வாய்ந்தவர்...

இந்நிலையில் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்காதது ஏன்? என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "குல்தீப் யாதவை வைத்து அணியில் எப்படி சமநிலையை காண முடியும், பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த முடியும் என்று பார்க்க வேண்டும். குல்தீப் உலகத் தரம் வாய்ந்தவர், தற்போது அவர் நன்றாக பந்து வீசுகிறார். எனவே அவர் களமிறங்குவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பேட்டிங் துறையில் சமநிலையை உண்டாக்க முயற்சிப்பது அவருடைய வருகையை தள்ளி வைக்கிறது.

வறண்டு இருக்கிறது...

நாளின் இறுதியில் உங்களுக்கு ரன்கள் தேவை. குறிப்பாக இங்கிலாந்து போன்ற அதிரடியாக விளையாடும் அணிக்கு எதிராக 400 ரன்கள் அடிப்பதற்காக உங்களுக்கு கூடுதலாக பேட்ஸ்மேன்கள் தேவை. மான்செஸ்டர் பிட்ச் இதுவரை வறண்டுதான் இருக்கிறது. அதனால் பந்து கொஞ்சம் சுழல்கிறது. அது வாஷிங்டன் சுந்தர், ஜடேஜாவை ஆட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது. குல்தீப்பை விளையாட வைக்க முயற்சிக்கிறோம். ஆனால் அதற்கு டாப் 6 பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்க வேண்டும். அப்படியானால் குல்தீப் போன்ற ஒருவரை நாங்கள் அணியில் சேர்க்க முடியும்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து