முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே போட்டியில் 10 சாதனைகளை முறியடித்த இங்கி., வீரர் ஜோ ரூட்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      விளையாட்டு
Joe-Rudd 2024-10-08

Source: provided

மான்செஸ்டர் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 10 சாதனைகளை முறியடித்துள்ளார்.

நான்காவது டெஸ்ட்... 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

ஜோ ரூட், ஸ்டோக்ஸ் சதம்...

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஜோ ரூட் 150 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் எடுத்தனர். பென் டக்கெட் (94 ரன்கள்), ஸாக் கிராலி (84 ரன்கள்), ஆலி போப் (71 ரன்கள்) எடுத்தனர்.

 10 சாதனைகள்....

இந்த போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்  10 சாதனைகளை முறியடித்தார். அதன் விவரம் வருமாறு:-

1. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ராகுல் டிராவிட் (13, 288 ரன்), காலிஸ் (13, 289), ரிக்கி பாண்டிங் (13,378) ஆகி யோரை ஜோ ரூட் முந்தினார். அவர் 13,409 ரன்க ளுடன் தெண்டுல்கருக்கு (15,921 ரன்) அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார். 

2. 157-வது டெஸ்டி விளையாட்டில் அவருக்கு 38-வது சதமாகும். இதன் மூலம் ஜோ ரூட் இலங் கையை சேர்ந்த சங்ககராவை சமன் செய்தார். டெண்டுல்கர் (51 சதம்), காலிஸ் (45), பாண்டிங் (41) ஆகியோருக்கு அடுத்தபடி யாக உள்ளார்.

3. இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் (12) எடுத்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார். அவர் ஸ்டீவ் சுமித்தை (11 செஞ்சுரி) முந்தினார்.

9-வது சதம்... 

4. இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் ஜோ ரூட் 9-வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் அவர் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) சாதனையை முறியடித்தார். பிராட்மேன் தான் ஒரு நாட்டுக்கு எதிராக சொந்த மண்ணில் அதிக சதம் அடித்த வீரராக இருந்தார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 8 சதம் அடித்து இருந்தார்.

5. மான்செஸ்ட் மைதானத்தில் டெஸ்டில் 1000 ரன் எடுத்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

6. 2-க்கு மேற்பட்ட மைதானத்தில் 1000 ரன்னை எடுத்த 3-வது இங்கிலாந்து வீரர் ஆவார். கிரகாம் கூச், அலிஸ்டயர் குக் ஆகியோருடன் இணைந்தார். ஜோ ரூட் லார்ட்ஸ் மைதானத்தில் 2166 ரன்னும், மான்செஸ்ட் மைதானத்தில் 1128 ரன்னும் எடுத்துள்ளார்.

7. 50 ரன்னுக்கு மேல் அவர் 104-வது முறையாக தொட்டார். காலிஸ், பாண்டிங்கை (இருவரும் தலா 103 தடவை) முந்தினார். டெண்டுல்கர் 119 முறையுடன் முதல் இடத்தில் உள்ளார்.

7195 ரன்... 

8. ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஜேக் ஹோப்ஸ் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார். ஹோபஸ் ஆஸ்திரேலியா விற்கு எதிராக 12 சதம் அடித்து இருந்தார்.

9. ஜடேஜா பந்தில் ஜோ ரூட் 588 ரன்களை எடுத்து உள்ளார். இதன் மூலம் அவர் ஸ்டீவ் வாக்கை முந்தினார். ஸ்டீவ் வாக் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் 577 ரன்களை எடுத்து இருந்தார்.

10. ஜோ ரூட் டெஸ்டில் சொந்த மண்ணில் 7195 ரன் எடுத்துள்ளார். இதன் மூலம் ஜெயவர்த்தனேவை முந்தினார். இலங்கையை சேர்ந்த அவர் சொந்த நாட்டில் 7167 ரன் எடுத்து உள்ளார். பாண்டிங் (ஆஸ்திரேலியாவில் 7578 ரன்), டெண்டுல்கர் (இந்தியாவில் 7216 ரன்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜோ ரூட் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து