முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். இடையே 3 போட்டிகள்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      விளையாட்டு
INDIA PAK 2025-05-03

Source: provided

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் ஆரம்பமாகும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குரூப்பில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி தெரிவித்தார். இவரே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்தத் தொடரில் 3 முறை நேருக்குநேர் சந்திக்க வாய்ப்புள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் ஒரு முறை பலப்பரீட்சை நடத்தும். அதன்பின், சூப்பர் - 4 சுற்றுக்கும் அசுரபலம் வாய்ந்த இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னேறிவிடும் என்பதால் அந்தச் சுற்றிலும் இவ்விரு அணிகளும் ஒரு முறை பலப்பரீட்சை நடத்தும். இறுதியாக, இறுதிப்போட்டியிலும் இந்தியாவை பாகிஸ்தான் சந்திக்க வாய்ப்புள்ளது.

_________________________________________________________________________________________

ஸ்குவாஷ்: அனாஹத்துக்கு வெண்கலம் 

எகிப்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் ஆசிய ஜூனியர் (19 வயது) சாம்பியன், இத்தொடரின் நம்பர்-2 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்து வீராங்கனை நாடியன் எல்ஹம்மாமை சந்தித்தார்.

இதில் அனாஹத் 6-11, 12-14, 10-12 என்ற செட் கணக்கில் 0-3 என தோல்வி அடைந்தார். இதனால் அனாஹத் சிங்குக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை அனாஹத் சிங்.

_________________________________________________________________________________________

மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கொரன்டின் மவுடெட் உடன் மோதினார்.

இதில் 6-1 என முதல் செட்டை மெத்வதேவ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் வீரர் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் மெத்வதேவ் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

_________________________________________________________________________________________

ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது போட்டி இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 214 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான பிராண்டன் கிங், கேப்டன் ஷாய் ஹோப் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராண்டன் கிங் 36 பந்தில் 62 ரன்கள் விளாசினார். ஷாய் ஹோப் 57 பந்தில் 102 ரன்கள் குவித்தார்.

பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. மிட்செல் மார்ஷ் (22), மேக்ஸ்வெல் (20), ஜோஷ் இங்கிலீஷ் (15), கேமரூன் கிரீன் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 5ஆவது விக்கெட்டுக்கு டிம் டேவிட் உடன் மிட்செல் ஓவன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக டிம் டுவிட் ஆட்டத்தில் அனல் பறந்தது. 16 பந்தில் அரைசதம் அடித்த டிம் டேவிட், 37 பந்தில் சதம் விளாசினார். அத்துடன் ஆஸ்திரேலியா 16.1 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரை வென்று முன்னிலை வகிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து