Idhayam Matrimony

இங்கிலாந்தில் ஜடேஜா புதிய சாதனை

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      விளையாட்டு
Jadeja 2024-03-17

Source: provided

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இப்போட்டியில் 2 ஆவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 1000+ ரன்கள் மற்றும் 30+ விக்கெட்கள் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.

_____________________________________________________________________________________________

இந்தியா-பாக். போட்டி குறித்து கங்குலி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ல் நடைபெறுகிறது. குரூப் பி-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, "பஹல்காம் போன்ற பயங்கரவாதம் நடக்கக் கூடாது. அவை நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா வலுவான நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் விளையாட்டு விளையாடப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். 

_____________________________________________________________________________________________

நாட்டுக்காக இதைச் செய்வோம்: ரிஷப் 

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31-ம் தேதி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரை 2-2 என சமன் செய்ய வெற்றி பெற வேண்டும் என்று சக வீரர்களுக்கு ரிஷப் பந்த் ஆலோனை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- தனிப்பட்ட இலக்கைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, எங்கள் அணியை வெற்றிபெறச் செய்ய அல்லது அணியை முன்னோக்கி நகர்த்த என்ன தேவைப்பட்டாலும் அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன்.  என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்ற உணர்ச்சியை விளக்குவது மிகவும் கடினம். என் அணிக்கு நான் சொல்லப்போகும் ஒரே செய்தி, வெற்றி பெறுவோம் நண்பர்களே. நாட்டுக்காக இதைச் செய்வோம். என்று கூறியுள்ளார். 

_____________________________________________________________________________________________

இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டான் 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 31 ஆம் தேதி முதல் ஓவலில் தொடங்குகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டான் சேர்க்கப்பட்டுள்ளார்.

31 வயதாகும் ஜேமி ஓவர்டான் இதுவரை இங்கிலாந்து அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். தொடரைக் கைப்பற்ற ஓவல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் அல்லது டிரா செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளதால், ஜேமி ஓவர்டான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

_____________________________________________________________________________________________

ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்து சாம்பியன் 

14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடை பெற்றது. நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் - ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் அடித்தது. மரியோனா கால்டென்டி இந்த கோலை அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்து சமன் செய்தது. அலெசியா ருஸ்சோ இந்த கோலை பதிவு செய்தார்.

ஆட்டம் முடியும் நேரமான 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் மேலும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. இதனால் கூடுதல் நேரமான 30 நிமிடம் கடைபிடிக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் மேலும் கோல் எதுவும் விழவில்லை. இதனால் சாம்பியன் யார் என்பதை நிர்ணயம் செய்வதற்காக பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி ஐரோப்பிய கோப்பையை வென்றது. இந்த வெற்றியால் அந்த அணி 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இங்கிலாந்து தொடர்ந்து 2-வது முறையாக ஐரோப்பியன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஜெர்மனியை தோற்கடித்து கோப்பையை வென்று இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து