முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிங்கேஷ் அனுமோள் இணையும் காயல்

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      சினிமா
Kayal 2025-08-12

Source: provided

ஜெ ஸ்டுடியோ ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில்  லிங்கேஷ், அனுமோள், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல். எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன்,  நான் அமெரிக்காவில் வசித்து வருவதால்  இயக்குனர் தமயந்தி ஸ்கிரிப்ட் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள் அதை வாசித்து முடித்ததும் இந்த படத்தை நாம் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. நடிகர்கள் ,தொழில் நுட்ப கலைஞர்கள் யாரையும் நேரில் பார்த்ததில்லை இன்றுதான் பார்க்கிறேன். ஒரு நல்ல கதை அதற்கான இடத்தில் தானாக வந்தடையும், இந்தக்கதையும் அப்படிப்பட ஒரு இடத்தை வந்தடைந்திருக்கிறது என்றார். விழாவில் பேசிய லிங்கேஷ், இயக்குனர் தமயந்தி அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாவாக்க முயற்சித்திருப்பது வரவேற்கிறேன். ஒரு பொறுப்பான படத்தில் நடித்த திருப்தி எனக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து